Home /News /tamil-nadu /

குடுமியான்மலை சிசாகீரீஸ்வர் கோயிலில் 61 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்ட திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு

குடுமியான்மலை சிசாகீரீஸ்வர் கோயிலில் 61 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்ட திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேர் திருவிழா

தேர் திருவிழா

Pudukkottai kudumiyamalai : பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயிலான குடுமியான்மலை சிசாகீரீஸ்வர் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயில்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேதா சிகாகிரீஸ்வர் ஆலய கோயிலின் தேரோட்ட திருவிழா 61 ஆண்டுகளுக்குப் பின் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    இந்த தேரோட்ட திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 61 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று முடிந்து, கடந்த ஆண்டு இக்கோயிலின் வெள்ளோட்ட திருவிழா நடைபெற்றது.

    Must Read : மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு

    கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இது கருதப்பட்டாலும், ஆறாம் 6 நூற்றாண்டிலேயே  குடைவரை கோயில் அருகே உள்ள பாறையில் பரம சேவகன் பொறிக்கப்பட்டு இருப்பதை ஏற்கனவே தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து இருப்பதால் இது தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவ தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

    செய்தியாளர் : ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Suresh V
    First published:

    Tags: Car Festival, Pudukkottai

    அடுத்த செய்தி