Home /News /tamil-nadu /

புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்... ஆராவாரத்துடன் ரசித்த பொதுமக்கள்!

புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்... ஆராவாரத்துடன் ரசித்த பொதுமக்கள்!

மாட்டு வண்டி எல்கை

மாட்டு வண்டி எல்கை

Pudukkottai Rekla Race : புதுக்கோட்டை அருகே உள்ள வம்பனில் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சாலைகளில் போட்டி போட்டு முந்தி சென்ற ஜோடி மாடுகளையும் ஒற்றைக் குதிரை வண்டிகளையும் சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்கவும் ...
    புதுக்கோட்டை அருகே உள்ள வம்பனில் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் மாஞ்சாவிடுதி மற்றும் கொத்தகோட்டை கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, கோயம்புத்தூர் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்க வந்திருந்தன.

    குறிப்பாக, மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, நடுமாடு, ஒற்றை மாடு, பூஞ்சிட்டு மாடு என ஐந்து பிரிவுகளாகவும்; குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புது பூட்டு குதிரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. காலை தொடங்கிய பந்தயம் மாலை வரை நடைபெற உள்ளது. குறிப்பாக காலை நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 11 ஜோடி மாட்டு வண்டிகளும் சிறிய குதிரையில் 18 குதிரை வண்டிகளும் பங்கேற்றன.

    பெரியமாடு பிரிவில், போக வர எட்டு மைல் தூரமும்; கரிச்சான் மாடு பிரிவில் போக வர ஆறு மைல் தூரமும்; சிறிய குதிரை போக வர 8 மைல் தூரமும் எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜோடி மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்‌. பெரிய மாடு பிரிவில் நடைபெற்ற போட்டியில் 8 ஜோடி மாடுகள் பங்கேற்ற நிலையில் முதல் பரிசான ரூபாய் 30 ஆயிரத்து இரண்டை புதுக்கோட்டை மாவட்டம் வேட்டணிவயல் அச்சையா மாடுகள் தட்டிச் சென்றது.

    இரண்டாவது பரிசாக, ரூபாய் 25,002ஐ சிவகங்கை மாவட்டம் நல்லாங்குடி முத்தையா மாடுகளும் மூன்றாவது பரிசாக ரூபாய் 19,002ஐ புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி கௌசல்யா மாடுகள் தட்டிச் சென்றன. இதேபோல் கரிச்சான் மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான 14,002ஐ புதுக்கோட்டை மாவட்டம் நெம்மலிகாடு அய்யனார் மாட்டு வண்டியும் இரண்டாவது பரிசான 12,002ஐ புதுக்கோட்டை மாவட்டம் பட்டாங்காடு  காத்தாயி அம்மன் மாட்டு வண்டியும்‌ மூன்றாவது பரிசாக 10,002ஐ தஞ்சாவூர் மாவட்டம் கடம்பங்குடி காமாட்சியம்மன் மாட்டு வண்டிகளும் தட்டிச் சென்றன.

    Read More : ஜெயலலிதா மரணம்.. 78 கேள்விகள்.. 3 மணி நேர விசாரணை.. ஓ.பி.எஸ் பரபரப்பு வாக்குமூலம்

    இதேபோல் சிறிய குதிரை வண்டி  பிரிவில் நடைபெற்ற போட்டியில்   முதல் பரிசான 14,002ஐ புதுக்கோட்டை வேலனும் இரண்டாவது பரிசான 12,002ஐ நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் பாஸ்கரன் குதிரை வண்டியும் மூன்றாவது பரிசான 10,002ஐ கரூர் நல்லகாத்தாயி குதிரை வண்டிகளும் தட்டிச் சென்றன.

    மாட்டு வண்டி பந்தையம்


    மேலும், குதிரை வண்டி பந்தயம் தொடக்கத்தில் ஒரு குதிரை வண்டியின் ஜாக்கி கீழே விழுந்ததால் ஜாக்கி இல்லாமலேயே அந்தக் குதிரை வண்டி முதலாவதாக எல்லைக் கோடு வரை சென்று பார்வையாளர்களை வியக்க வைத்த நிலையில், ஜாக்கி இல்லாமல் சென்ற மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு ஜாகிர் என்பவரின் குதிரைக்கு சிறப்பு பரிசாக 5000 ரூபாய் வழங்கி பாராட்டப்பட்டது.

    குதிரை வண்டி எல்கை பந்தயம்


    இதேபோல் இன்று மதியம் 1-30 மணி முதல் மாட்டு வண்டி பந்தயத்தில் நடுமாடு, ஒற்றை மாடு, பூஞ்சிட்டு மாடும்  குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை புது பூட்டு குதிரை என்ன பந்தயம் நடைபெற உள்ளது.

    Must Read : மெழுகுவர்த்தியில் தொடங்கிய வாழ்க்கை பெரு வெளிச்சத்தை காணப் போகிறது - மகிழ்ச்சியில் நரிக்குறவர் இனமக்கள்

    மேலும், விமரிசையாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் வம்பனிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் இருபுறங்களிலும் இருந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்வதை ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

    செய்தியாளர் : ர.ரியாஸ், புதுக்கோட்டை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Horse race, Pudukkottai

    அடுத்த செய்தி