Home /News /tamil-nadu /

பயிற்சி மைதானத்தில் அத்லட் வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.. விளையாட்டு வீரர்கள் போராட்டம்

பயிற்சி மைதானத்தில் அத்லட் வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.. விளையாட்டு வீரர்கள் போராட்டம்

அரசு விளையாட்டு மாணவிகள் போராட்டம்

அரசு விளையாட்டு மாணவிகள் போராட்டம்

வீரர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம்சாட்டி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் அத்லட் வீரர்கள் மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் அத்லட் வீரர்களுக்கு எந்த ஒரு விளையாட்டு உபகரணமும் கொடுப்பதில்லை என்று கூறியும் அங்கு செயல்படும் அரசு விளையாட்டு மாணவிகள் விடுதியில் தற்காலிகமாக பயிற்றுநராக உள்ள செந்தில் கணேஷ் தனியாக கிளப் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் குடிதண்ணீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என குற்றம்சாட்டி அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகளுக்கு விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த விடுதியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டு மைதானத்தில் தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் விளையாட்டு வீரர்கள் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு வகையான குழு விளையாட்டுகளையும் தனிநபர் விளையாட்டுகளான ஓட்டம், குண்டெறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட அத்லட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விளையாட்டு பயிற்சி மாணவிகளுக்கான அரசு விடுதியில் தற்காலிகமாக பயிற்றுநராக பணிபுரியும் செந்தில்கணேஷ் என்பவர் தனியாக ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தி வருவதாகவும் அவரிடம் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும் அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்களையும் கொடுப்பதாகவும் மேலும் இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மற்ற வீரர்களுக்கு எந்த ஒரு விளையாட்டு உபகரணமும் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் இந்த விளையாட்டு பயிற்சி மேற்கொள்பவர்கள் முறையாக பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் மேலும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் இங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம்சாட்டி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் அத்லட் வீரர்கள் மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ALSO READ | ரசாயன உப்பை சமையல் உப்பு என நினைத்து தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி மனுவாக கொடுங்கள் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு பயிற்சி மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் பல்வேறு துறையில் சாதித்து பதக்கங்களை குவித்து வந்ததாகவும் ஆனால் கடந்த சில மாதங்களாக முறையான உபகரணங்கள் அடிப்படை வசதிகள் இல்லாததால் முறையான பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றும் மேலும் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பெண்கள் வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் வீட்டு வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று வேதனை தெரிவித்த வீரர்கள் இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி வீரர்களுக்கு முறையான உபகரணங்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Pudukottai, Sports

    அடுத்த செய்தி