ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகைக்கடன் தள்ளுபடி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.. இதுதான் திராவிட மாடலா? - விஜயபாஸ்கர் கேள்வி

நகைக்கடன் தள்ளுபடி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.. இதுதான் திராவிட மாடலா? - விஜயபாஸ்கர் கேள்வி

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

pudhukottai | நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று திமுக கூறியது ஆனால் தற்போது டாஸ்மாக் வருமானத்தில் தான் இந்த ஆட்சியே நடந்து வருகிறது - விஜயபாஸ்கர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மூடுவிழா காண்பது திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தான் திராவிட மாடலா என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் இன்றைக்கும் ஆளுங்கட்சியாக அதிமுகதான் உள்ளது.

பகல் நேரத்தில் வார்த்தெடுக்கும் சூரியன் அதன் தாக்கம் இரவு நேரத்திலும் தற்போதும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. அதேபோன்றுதான்  தமிழகத்தில் ஆட்சியும் மக்களை வாட்டி வருகிறது.

Also Read: ஈபிஎஸ் ஆட்சியில் UPS-க்கு வேலையில்லை.. ஆனால் இப்போ? - திமுக அரசை விமர்சிக்கும் எச்.ராஜா

சூரியன் சுட்டெரிக்கிறது நமக்கு மட்டுமல்ல திமுகவில் காரர்களுக்கும் தான் திமுக காரர்கள் தற்போது தமிழகத்தில் ஏன் இந்த ஆட்சி வந்தது என்று புலம்பும் அளவிற்கு இந்த ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி என்பது ஒரு குடை மக்களைப் பாதுகாக்கும் குடையாக  இருக்க வேண்டும் நிழல் கொடையாக இருக்க வேண்டும்.

திமுகவின் ஆட்சி அனைத்து துறைகளிலும் பாதித்து உள்ளது.

நகை கடன் தள்ளுபடி முப்பத்தி ஆறு லட்சம் பேருக்கு என்று கூறிவிட்டு தற்போது யாருக்குமே தள்ளுபடி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகப்பெரிய கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று தொடங்கப் பெற்ற அனைத்து திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி பதினொரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவை அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது திமுக கொண்டு வந்த திட்டம் போன்று அதை செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது இதுதான் தமிழ்நாடு மாடல்.

திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தது போன்று சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம். என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அதை எப்படியும் சமாளிக்கும் தைரியம் எனக்கு உள்ளது சமாளித்து வெற்றி பெறுவேன் இருப்பினும் அதிமுக தொண்டன் மீது திமுக பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்தால் அதை நாங்கள் பார்த்து சும்மா இருக்க மாட்டோம் இவ்வாறு அவர் பேசினார்.

Also Read: சிமெண்ட் விலை உயர்வால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவபதி,  ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை திமுக கொடுத்தனர் ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை கிடப்பில் போடுகின்றனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது அப்போது நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. திமுக ஆட்சி வந்தால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்

திமுகவினர் 10 வருடம் ஆட்சி இல்லாமல் காய்ந்து போய் உள்ளனர்

மக்கள் தெளிவாகி விட்டேன் அடுத்த முறை மக்களே அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு தயாராகிவிட்டனர். திமுக ஆட்சி குடும்ப ஆட்சி குடும்பத்தின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இடம்தான் பேச வேண்டும் என்ற நிலை உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று திமுக கூறியது ஆனால் தற்போது டாஸ்மாக் வருமானத்தில் தான் இந்த ஆட்சியே நடந்து வருகிறது. டாஸ்மாக்கை மூடினால் ஆட்சியே மூடு நிலைமை ஏற்படும். நிதி பற்றாக்குறையால் ஆட்சி நடத்த முடியாத நிலையில் தான் திமுக உள்ளது இதே நிலை நீடித்தால் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் உருவாகும் வெகு தூரத்தில் இல்லை என்று பேசினார்.

செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: ADMK, DMK, Politics, Pudhukottai, Tamil News, Tamilnadu, Vijaya Baskar