வறுமையில் 3 பெண் குழந்தைகளுடன் தவிக்கும் விதவை தாய்க்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, அவருக்கு பிரதம மந்திரியின் அவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்காகவும், விதவை உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தி வெளியிட்டு உதவிய நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அந்தப் பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்திலுள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் வசிப்பவர் முருகேசன் மனைவி சீரங்கம். இவர்களுக்கு பிரியதர்ஷினி, கீர்த்தனா, அபர்ணா ஆகிய மூன்று மகள்களும் கிஷோர் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த ஆண்டு முருகேசனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் விரக்தியடைந்த அவர் கட்டிய மனைவியும் பெற்ற பிள்ளைகளையும் தன்னந் தனியே விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனால் அதிர்ந்துபோன சீரங்கம், கணவன் கைவிட்டுப்போன சோகம் ஒரு புறம், வறுமை மறுபுறம். இதனால், நான்கு பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் தனிமரமாய் தவிக்கிறார். அதேவேளையில், தனது குழந்தைகளின் கல்வியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி வருகிறார்.
அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிதிலமடைந்த மேற்கூரையில், 10க்கு 10 அடியில் உள்ள வீட்டில், சீரங்கம் மற்றும் அவரது குழந்தைகளை முகத்தில் பிரதிபலிக்கும் சோகம், பள்ளி விடுமுறை என்றால் உணவுக்கே வழியில்லாத பரிதாபம் உள்ளிட்ட இன்னல்கள் அவர்கள் குடும்பத்தின் வறுமையை உணர வைக்கிறது. இது குறித்து கடந்த 13ஆம் தேதி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பப்பட்டது.
Must Read : மிஸ் கூவாகம் போட்டியை இந்த ஆண்டுமுதல் உளுந்தூர்பேட்டையில் நடத்த கோரிக்கை
இதன் எதிரொலியாக தமிழக அரசு உத்தரவின் பெயரில் பிரதம மந்திரியின் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் விதவை உதவித்தொகை ரூ-1000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தி வெளியிட்டு உதவி செய்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அந்தப் பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Read More : ஊரைக் கூட்டி வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு: சேலம் தம்பதியின் நெகிழ்ச்சி செயல்
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண்ணிற்கு அரசு சார்பில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் தனது மூன்று பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து யார் தயவும் இன்றி வாழ்ந்து காட்ட முடியும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home, Pm, Poverty, Pudukkottai