Home /News /tamil-nadu /

பத்மஸ்ரீ விருது பெற்ற சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு

பத்மஸ்ரீ விருது பெற்ற சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு

 முத்து கண்ணம்மாள்

முத்து கண்ணம்மாள்

Viralimalai R Muthukannammal : மன்னர்கள் ஆண்ட காலத்தில் சதிராட்டம் என்பது கோயில் விழாக்களில் சிறப்பு பெற்றதாக இருந்துள்ளது. அக்கலையை கற்று தேர்ச்சி பெற்ற முத்து கண்ணம்மாள் சதிராட்ட கலையின் கடைசி வாரிசாக கருதப்படுகிறார்.

    பத்மஸ்ரீ விருது பெற்று ஊர் திரும்பிய சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் முத்து கண்ணம்மாள். பரதக் கலையின் முன் கலையாக கருதப்படும் சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்றவர். மன்னர்கள் ஆண்ட காலத்தில் சதிராட்டம் என்பது கோயில் விழாக்களில் சிறப்பு பெற்றதாக இருந்துள்ளது. அப்பொழுது நடைபெறும் கோயில் திருவிழாக்களில் சதிராட்டம் இல்லாமல் விழா களை கட்டாது என்று கூறப்படுகிறது.

    அக்கலையை கற்று தேர்ச்சி பெற்ற முத்து கண்ணம்மாள் சதிராட்ட கலையின் கடைசி வாரிசாக கருதப்படுகிறார். இந்த நிலையில் மத்திய பாஜக அரசு விராலிமலை முத்துக்கண்ணமாளை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றவராக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சதிராட்ட கலைஞரான விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.



    நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது பெற்று இன்று தனது சொந்த ஊரான விராலிமலை திரும்பிய அவருக்கு விராலிமலை ஊர் பொதுமக்கள் சார்பில் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து உற்சாக வரவேற்பளித்தனர். இதில் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு காரின் மேற்புறத்தில் அவரை நிற்கவைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

    செய்தியாளர் : ர.ரியாஸ் , புதுக்கோட்டை மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Padma Shri, Pudukkottai

    அடுத்த செய்தி