வீட்டில் விறகு எடுக்கச் சென்ற போது மலைப் பாம்பு பெண்ணைக் கடித்தது. கடித்த பாம்புடன் வந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவியை சேர்த்த கணவனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பாம்பு கடித்துவிட்டது என தெரிந்தால் அடுத்த நிமிடமே அந்த பாம்பை விரட்டுவது அடிப்பது போன்ற செயல்கள் தான் பல இடங்களில் நடைப்பெறும். ஆனால் கடித்த பாம்பையும் பாதிக்கப்பட்ட தன் மனைவியையும் காப்பாற்றி ஒருவர் செய்த தனித்துவமான செயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலதுருவாசபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி இவரது மனைவி அழகு வீட்டில் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகை எடுக்க சென்றபோது ஏற்கனவே வீட்டின் முன்பு வெட்டி வைக்கப்பட்டிருந்த பனைமரத்தின் உள்ளே இருந்து வெளியே வந்த மலைப்பாம்பு அழகின் காலை கடித்து விட்டது. இதனையடுத்து மனைவி கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் பாண்டி மனைவி அழகுவை மீட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் 12 மணி நேரம் ஊரை காலி செய்யும் கிராம மக்கள் - பழமையான நம்பிக்கைதான் காரணம்!
பின்னர் பனைமரத்தை உடைத்து அதிலிருந்த மலைப்பாம்பை பிடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கடித்த பாம்பை மருத்துவரிடம் காண்பித்து மனைவியை சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அதோடு விட்டுவிடாமல் அந்த பாம்பை காக்கும் எண்ணத்தில் உரிய இடத்தில் அந்த பாம்பினை சேர்க்கும் வண்ணம் பாண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து பிடிபட்ட பாம்பை திருமயம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பூலாங்குறிச்சி அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் அனைத்து உயிரினங்களையும் மதிக்கும் வண்ணம் பாம்பு கடித்த மனைவியையும் மலைப்பாம்பையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த கணவர் பாண்டியின் செயலைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் அனைத்து உயிரினங்களையும் மதிக்கும் வண்ணம் தன் மனைவியை காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல் மலைப்பாம்பையும் உரிய இடத்தில் சேர்த்த பாண்டியின் குணம் வியக்கத்தக்கது. மேலும் கடித்த பாம்புடன் மனைவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த கணவர் பாண்டியின் செயல் சற்று பக்கென்று தான் பொதுமக்களுக்கு இருந்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
செய்தியாளர் : ர.ரியாஸ் (புதுக்கோட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudukkottai, Python, Snake, Tamil News