• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • `ஜாக்கி'கள் மூலம் தரையில் இருந்து 4 அடி உயர்த்தப்பட்ட 3 மாடி கட்டடம்..

`ஜாக்கி'கள் மூலம் தரையில் இருந்து 4 அடி உயர்த்தப்பட்ட 3 மாடி கட்டடம்..

புதுக்கோட்டை:  4 அடி உயர்த்தப்பட்ட 3 மாடி கட்டடம்..

புதுக்கோட்டை: 4 அடி உயர்த்தப்பட்ட 3 மாடி கட்டடம்..

புதுக்கோட்டையில் மூன்று மாடி கட்டடத்தை தரையில் இருந்து 4 அடி உயர்த்தி மதுரையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

  • Share this:
    புதுக்கோட்டை பெரியார் நகரின் வழியாகச் செல்பவர்கள் ஒரு நிமிடம் நின்று உயர்த்தப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை பார்க்கத் தவறுவதில்லை. கட்டடத்திற்கும் தரைக்கும் இடையில் ஜாக்கிகள் தாங்கி நின்று கொண்டிருக்க, கிட்டத்தட்ட அந்தரத்தில் தொங்கும் நிலையில் கட்டடத்திற்கு அடியில் தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்து உயந்த்தியுள்ளனர்.

    சாலையின் மட்டத்தோடு சரிசமமாக நின்று கொண்டிருந்த அந்த கட்டடத்திற்குள் மழை நீர் புகுவது பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் கட்டடத்தை சரிசெய்ய நினைத்த உரிமையாளர் தரப்பினர் மதுரையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதையடுத்து 2480 சதுர அடி அளவிலான இந்த கட்டடத்தை ஷிஃப்டிங் அண்ட் லிஃப்டிங் என்ற முறையில் உயரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கின. 250 ஜாக்கிகள் 12 தொழிலாளர்களைக் கொண்டு 30 நாட்களில் கட்டடம் 3 அடி உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டினால் 60 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்ற நிலையில், 6 லட்ச ரூபாய் செலவில் மேலும் 30 ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார் இந்தப் பணிகளை மேற்கொளும் பொறியாளர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்...

    நம் ஊரில் சாலை மேலேயே புதிதாக சாலை போடுவதால் சில ஆண்டுகளில் சாலைப்பரப்பை விட கீழிறங்கும் கட்டடங்களை சரிசெய்ய ஷிஃப்டிங் அண்ட் லிஃப்டிங் முறை சிறப்பான தீர்வு என்கின்றனர் இதனால் பயன் அடைந்தவர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: