Home /News /tamil-nadu /

110 வயதில் உயிரிழந்த மூதாட்டி.. ஆட்டம் பாட்டத்துடன் நல்லடக்கம் செய்த பேரப்பிள்ளைகள்

110 வயதில் உயிரிழந்த மூதாட்டி.. ஆட்டம் பாட்டத்துடன் நல்லடக்கம் செய்த பேரப்பிள்ளைகள்

பொட்டுஅம்மாள்

பொட்டுஅம்மாள்

Pudhukottai : 110 வயது வரை வாழ்ந்த மூதாட்டி பொட்டு அம்மாளின் ஆரோக்கியம் உறவினர்கள், பொதுமக்களிடம் இயற்கை வாழ்வியல் குறித்த உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி அருகே 110 வயதில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் கூடி கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளோடு ஆட்டம் பாட்டத்துடன் நல்லடக்கம் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா பயமறியானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுஅம்மாள் (110) 1911-ம் ஆண்டு பிறந்த இவருக்கும் நாதப்பன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று லெட்சுமி, நீலாவதி, வீரம்மாள் ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 26 பேரன்கள் 36 பேத்திகள் என மொத்தம் 62 பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் நாதப்பன் உயிரிழ்ந்துள்ளார்.

    கணவர் உயிரிழந்ததையடுத்து பொட்டு அம்மாள் தனது மூன்று மகள்களின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளார். பொட்டு அம்மாள் வயல் காட்டிற்கு செல்வது, இயற்கை உணவு உட்கொள்ளுவது போன்ற பாரம்பரிய முறைப்படி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் பொட்டு அம்மான் 110 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது 100 ம் ஆண்டு அகவைக்குப் பிறகு வருகின்ற ஒவ்வொரு பிறந்த நாளிலும் பேரப்பிள்ளை அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, விருந்து வைத்து கொண்டாடி வந்துள்ளனர்.

    Also Read: சொத்துக்காக அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி.. குமரியில் நடந்த பயங்கரம்

    இந்நிலையில் எதிர்வருகின்ற மார்ச் மாதத்தில் 111 வது பிறந்த நாள் விழாவை கொண்டாட இருந்த நிலையில் பாட்டி பொட்டுஅம்மாள் கடந்த 23-ம் தேதி இயற்கை மரணம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூடிய 62 பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள், அவருக்கு நற்சடங்குகள் செய்து கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் நல்லடக்கம் செய்தனர்.

    Also Read:  உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு… போலீசார் விசாரணை

    110 வயது வரை வாழ்ந்து வந்த மூதாட்டி பொட்டு அம்மாளின் ஆரோக்கியம் உறவினர்கள், பொதுமக்களிடம் இயற்கை வாழ்வியல் குறித்த உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: ராஜசேகரன் (புதுக்கோட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Death, Pudhukottai, Woman

    அடுத்த செய்தி