பட்டியலின இளைஞரை பயங்கரமாக தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்

Youtube Video

துஅருந்தியபடி மதனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்; அவர் குடிக்க நீர் கேட்டபோது வாயில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

 • Share this:
  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைக் கடத்திச் சென்று இரவு முழுவதும் அடித்து துன்புறுத்திய நபர்கள், அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த குணத்திரான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான மதன். பட்டியலினத்தைச் சேர்ந்த மதன், பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்து விட்டு கோவையில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். 20 நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு சென்றார். கடந்த 24ம் தேதி பட்டமங்கலத்தில் இரவு 7 மணிக்கு 4 நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றார்.

  தண்ணிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், மெய்கண்டன், அமரடக்கியைச் சேர்ந்த மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் வந்து ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, அடித்துள்ளனர். தாக்கப்பட்ட மதன் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார் மதன். அப்போது அமரடக்கி அருகில் இவர்களை வழிமறித்த பிரதீப் உள்ளிட்ட நான்கு பேரும் அருகில் உள்ள கண்மாய்க்கு காரில் ஏற்றிக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

  அங்கு மதுஅருந்தியபடி மதனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்; அவர் குடிக்க நீர் கேட்டபோது வாயில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு நான்கு பேரும் அசந்து துாங்கிய போது, அவர்களிடம் இருந்து மதன் தப்பித்து அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார் பின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

  தாக்குதல் குறித்தும் ஜாதி ரீதியிலான அவமானப்படுத்தல் குறித்தும் மீமிசல் காவல்நிலையத்தில் மதன் புகாரளி்த்தார். புகாரின் பேரில், பிரதீப், மெய்கண்டன், மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: