இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரம் காத்திருந்து வாக்கு பதிவு செய்த முன்னாள் அமைச்சர்

இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரம் காத்திருந்து வாக்கு பதிவு செய்த முன்னாள் அமைச்சர்

திருமயம் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி

காலை 7 மணிக்கு முதல் ஆளாக வாக்குச் சாவடிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரகுபதி இயந்திரம் பழுது காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 • Share this:
  தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மும்மரமாக வாக்களிக்க சென்று வருகின்றனர்.

  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை தொகுதியில் புதுக்கோட்டை கீழ இரண்டாம் விதி பகுதியிலுள்ள சுப்புராமஐயர் ஆரம்பப்பள்ளியில் வாக்களிக்கச் சென்றார்.

  மேலும் படிக்க...திருச்சியில் இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமான வாக்குபதிவு

  இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு முதல் ஆளாக வாக்குச் சாவடிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரகுபதி இயந்திரம் பழுது காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: