ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் : புதுவையில் இன்று தொடக்கம்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் : புதுவையில் இன்று தொடக்கம்!

புதுச்சேரி ஆளுநர், முதல்வர்

புதுச்சேரி ஆளுநர், முதல்வர்

முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ரூ. 1000 aid for women family heads:  புதுச்சேரியில் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த 21 முதல் 55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகையாக ரூ.ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும் என முதல அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

இந்த திட்ட துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. புதிய திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தில் 70ஆயிரம் பெண்கள் உதவித்தொகை பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Puducherry