ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'பட்டாசுகளை வெடித்து சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்!

'பட்டாசுகளை வெடித்து சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்!

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

Tamilisai wishes | கொரோனாவை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் மோடிக்கு நன்றி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பட்டாசுகளை எப்போதும்போல் வெடித்து நம் பாரம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணிபுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும் என தெரிவித்துள்ளார்

  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த  பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

  ALSO READ | மீண்டும் அதிகரிக்கும் மட்டன் விலை : இன்றைய நிலவரம் என்ன?

  மேலும், நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் என அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும் என பதிவிட்டுள்ளார்.

  பட்டாசுகளை எப்போதும்போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் எனவும் வாழ்த்தியுள்ளார்.

  மேலும் தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி) உண்டு நம் உடல் நலம் காப்போம் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Deepavali, Diwali, Dr tamilisai soundararajan, Tamilisai, Tamilisai Soundararajan, Wishes