முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வண்ண மீன் பொம்மைகளைக் கொண்டு பெரிய மீன்களைப் பிடிக்கும் புதுச்சேரி மீனவர்கள்!

வண்ண மீன் பொம்மைகளைக் கொண்டு பெரிய மீன்களைப் பிடிக்கும் புதுச்சேரி மீனவர்கள்!

பெரிய மீன்களைப் பிடிக்க அதற்கான வலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மீனவர்கள் தூண்டில்களைப் பயன்படுத்தி நூதன முறையில் பெரிய மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

பெரிய மீன்களைப் பிடிக்க அதற்கான வலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மீனவர்கள் தூண்டில்களைப் பயன்படுத்தி நூதன முறையில் பெரிய மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

பெரிய மீன்களைப் பிடிக்க அதற்கான வலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மீனவர்கள் தூண்டில்களைப் பயன்படுத்தி நூதன முறையில் பெரிய மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியில் வண்ண மீன் பொம்மைகளைக் கொண்டு பெரிய மீன்களைப் பிடிக்கும் நூதன உத்தியை மீனவர்கள் கையாண்டு வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் புதுச்சேரியில் இவ்வாண்டிற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இந்தத் தடைக்காலம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதமே ஊரடங்கு அமலுக்கு வந்ததால், மீனவர்கள் அப்போது முதலே மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடைக்காலம் முடிய இன்னும் வெகு நாட்கள் இருப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க விசைப்படகில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவக் கிராமங்களில் தனித்தனியே பிரித்து குறிப்பிட்ட நாட்களில் சில கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சுழற்சி முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களும் சிறிய படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வலையில் பெரிய அளவில் மீன்கள் சிக்குவதில்லை. கிடைக்கும் மீன்களை கரைக்குக் கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனிடையே பெரிய மீன்களைப் பிடிக்க அதற்கான வலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மீனவர்கள் தூண்டில்களைப் பயன்படுத்தி நூதன முறையில் பெரிய மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

சிறிய அளவிலான வண்ணமயமாக ஒளிரும் பொம்மை மீன்களைக் கொண்டு அதனுடன் பல தூண்டில் முள்கள் இணைத்து கடலுக்குள் வீசுகின்றனர். இந்த வண்ண மீன் பொம்மை  தண்ணீரில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போது அதை உண்மையென நம்பி பெரிய மீன்கள் கவ்விப் பிடிக்க முயல்கின்றன. அந்தச் சமயத்தில் பொம்மையுடன் இணைக்கப்பட்டிருக்கும் தூண்டில் முள்களில் பெரிய மீன் சிக்கி பிடிபடுகிறது.

இதுபோன்று பல தூண்டில் முள்களைப் பயன்படுத்தி மீனவர்கள் பெரிய அளவிலான மீன்களைப் பிடித்து வருகின்றனர். இந்த நூதன மீன்பிடிப்பு முறை தற்போது புதுச்சேரியில் பரவலாக இருந்து வருகிறது. இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ”கடலில் தூண்டில் கொண்டு மீன்பிடிக்கும்போது சிறிய அளவிலான மீன்கள் பிடிபடும். பெரிய மீன்கள் அவ்வபோது சிக்கும். இதனால் பெரிய மீன்களைப் பிடிக்க வண்ண வண்ண மீன் உருவ பொம்மைகளை தயாரித்து அதனுடன் தூண்டில் முள்கள் இணைத்து ஆழ்கடலில் வீசினால், பெருமளவு பெரிய அளவிலான மீன்கள் பிடிபடும். தற்போது இச்சூழலில் பெரிய மீன்களை பொம்மை மீன்களைப் பயன்படுத்தி தான் பிடித்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Fishermen, Lockdown, Puducherry