என்.எல்.சி விபத்து: உரிய பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும் - புதுச்சேரி முதல்வர்
நெய்வேலி என்.எல்.சி-யில் விபத்து ஏற்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி.
- News18 Tamil
- Last Updated: July 1, 2020, 8:38 PM IST
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சியில் உள்ள 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் விடுத்துள்ள வீடியோ பதிவில்,
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றிய பணியாளர்கள் உயிரிழந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் கூறினார்.
Also see:
மேலும் கூறுகையில், மீண்டும் இதுபோல் விபத்து ஏற்படாமல் இருக்க அனல் மின் நிலையத்தின் நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு சாதனைகளைச் செய்து வந்தாலும் இதுபோன்ற விபத்துகள் நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு ஒரு கறுப்புப் புள்ளி எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.