தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரியில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்.ஆர்.காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்தன. அதேபோல, வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா.ஜ.க 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.
அதேபோல, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதன்மூலம் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.