Home /News /tamil-nadu /

புதுவை, தமிழகத்தில் 13 இடங்களில் சதமடித்த வெயில்

புதுவை, தமிழகத்தில் 13 இடங்களில் சதமடித்த வெயில்

கோப்பு படம்

கோப்பு படம்

தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தமிழகம் மற்றும் புதுவையில் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழையானது கடந்த ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 13 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் அதிகப்படியாக திருத்தணியில் 106.1 பாரன்ஹீடும், அதற்கு அடுத்தபடியாக மதுரையில் 104.7 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடலூரில் 104.3, சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.1,  நாகப்பட்டினத்தில் 104.1, புதுச்சேரியில் 104.1, பரங்கிப்பேட்டையில் 104,  சென்னை மீனம்பாக்கத்தில் 103.1, தூத்துக்குடியில் 103.1, திருச்சியில் 102.9, காரைக்காலில் 101.8, வேலூரில் 100.2, தொண்டியில் 100 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 69 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி