புதுவை மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி வழக்கு!

புதுவை மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றம்.

மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின் துறை ஊழியர்கள், கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரி மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி புதுவை அதிமுக எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின் துறை ஊழியர்கள், கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், போராட்டத்தை கைவிடாவிட்டால் ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘நிவர் புயலால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின் கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன. மின் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, இவை சரி செய்யப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத்’ தெரிவித்துள்ளார்.

Also read... BREAKING | சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான தடை தொடரும் - உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்..மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு எம்.எல் ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், மக்கள் பாதிப்பை கருத்தில் கொண்டு, தனது மனுவின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என எம்.எல்.ஏ. தரப்பில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: