Home /News /tamil-nadu /

ஆதரவின்றி விடப்பட்ட பார்வையற்ற கர்ப்பிணி பெண் மீட்பு: சமூக அமைப்பு மற்றும் காவல்துறையின் பாராட்டப்படும் செயல்பாடு..!

ஆதரவின்றி விடப்பட்ட பார்வையற்ற கர்ப்பிணி பெண் மீட்பு: சமூக அமைப்பு மற்றும் காவல்துறையின் பாராட்டப்படும் செயல்பாடு..!

புதுக்கோட்டை காவல்துறை

புதுக்கோட்டை காவல்துறை

சாவித்திரி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உள்ளதால் அவரை சென்னையில் உள்ள பார்வையற்றோர் பயிற்சி மையத்திற்கு அனுப்பி அவருக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவர் கர்ப்பமுற்ற நிலையில் கணவனால் கைவிடப்பட்டு யார் ஆதரவுமின்றி திக்கு திசை தெரியாமல் கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தில் தவித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துணைவன் என்ற சமூக அமைப்பு மாற்றுத்திறனாளி சாவித்திரியை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளது பின்னர் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பெண்கள் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவின் மூலம் கந்தர்வகோட்டையில் உள்ள ரினிவல் பவுண்டேஷன் என்ற காப்பகத்தில் அவரைத் தங்க வைத்துள்ளார், பின்னர் துணைவன் அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வந்த சாவித்திரி ஊரடங்கு உத்தரவு முதல்முறையாக பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி பிரசவவலி வந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அன்றைய தினமே அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்நிலையில் குழந்தை சற்று ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சாவித்திரியும் குழந்தையையும் துணைவன் அமைப்பு தொடர்ந்து பராமரித்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சாவித்ரியின் குழந்தைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் குழந்தை பிறந்த நேரம் நட்சத்திரம் உள்ளிட்டவற்றை வைத்து நியூமராலஜி படி ஸ்ரீபதி என்று பெயர் சூட்டியுள்ளார், இந்நிலையில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது இதில் சாவித்ரியையும் குழந்தையையும் இதுநாள் வரை பராமரித்து வந்தவர்கள் மற்றும் நகர காவல் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வைத்த ஸ்ரீபதி என்ற பெயரை குழந்தைக்கு வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பின்னர் சாவித்திரி அவரையும் அவர் குழந்தையையும் பாதுகாத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் கவிதையையும் பாடலையும் பாடி நன்றி தெரிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சாவித்திரி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உள்ளதால் அவரை சென்னையில் உள்ள பார்வையற்றோர் பயிற்சி மையத்திற்கு அனுப்பி அவருக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் குழந்தையை அவர் எப்படி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அப்படி வளர்க்க அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் துணைவன் அமைப்பு தெரிவித்துள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Gunavathy
First published:

Tags: Pudhukottai

அடுத்த செய்தி