• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புயலால் வேறோடு சாய்ந்த முந்திரி மரங்கள்: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

புயலால் வேறோடு சாய்ந்த முந்திரி மரங்கள்: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

முந்திரி மரங்கள்

முந்திரி மரங்கள்

Cyclone Gaja | கஜா புயலால் சேதமடைந்த முந்திரி மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான முந்திரி மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். பணப்பயிர்களாக மா, பலா, வாழை, தேக்கு மற்றும் முந்திரி மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் முதுகுளம், வீரடிப்பட்டி, நாயக்கர் பட்டி, குருங்குளம், ஆதனக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த முந்திரி மரங்கள் கஜா புயலால் அழிந்துவிட்டன.

முந்திரி மரங்கள் நடப்பட்ட 5 வருடங்கள் கழித்தே பலன் கொடுக்கத் தொடங்கும். தற்போது மரங்கள் அனைத்தும் சாய்ந்து விட்டதால் மீண்டும் மரங்கள் நட்டு 5 வருடங்கள் கழித்தே பலன் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

விவசாயக் கடன் பெற்று தொழில் செய்து வந்த நிலையில், வருவாயை இழந்து நிற்கும் விவசாயிகள் பெற்ற கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சேதமடைந்த முந்திரி மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: