முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சீரியலுக்கு வந்த பிறகு தேவயானியிடம் இப்படியொரு மாற்றமா? ஷாக்கில் ரசிகர்கள்!

சீரியலுக்கு வந்த பிறகு தேவயானியிடம் இப்படியொரு மாற்றமா? ஷாக்கில் ரசிகர்கள்!

சின்னத்திரைக்கு வந்த பிறகு எப்போதும் புடவையிலேயே இருக்கும் தேவயானி தற்போது பேண்ட்-ஷர்ட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரைக்கு வந்த பிறகு எப்போதும் புடவையிலேயே இருக்கும் தேவயானி தற்போது பேண்ட்-ஷர்ட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரைக்கு வந்த பிறகு எப்போதும் புடவையிலேயே இருக்கும் தேவயானி தற்போது பேண்ட்-ஷர்ட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

    தமிழ் வெள்ளித்திரையில் 90-களில் முக்கிய மற்றும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர் பிரபல நடிகை தேவயானி. காதல் கோட்டை, சூர்யவம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை தேவயானி. அஜித், விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார். இவர் அதிகம் நடித்த காலத்தில் பெரும்பாலான ஹீரோயின்கள் நடிப்பை தவிர கவர்ச்சியிலும் அதிரடி காட்டிய நிலையில், குடும்ப பாங்கான ரோல்களில் நடித்து குடும்ப பெண்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை தேவயானி.

    நடிகை தேவயானி கடந்த 1993-ல் வெள்ளித்திரையில் அறிமுகமானாலும் முதன் முதலில் இவர் வங்க மொழி திரைப்படமான சாத் பென்சொமி-யில் சுஷ்மாவாக நடித்தார். இதை தொடர்ந்து கின்னாரி புழையோரம் என மலையாள திரைப்படத்தில் 1994-ஆம் ஆண்டு நடித்தார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் கடந்த 1994-ல் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான தொட்டாசிணுங்கி.

    ரகுவரன், கார்த்தி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தில் ரகுவரனின் தங்கையாக தேவயானி நடித்திருந்தார். தொட்டாசிணுங்கியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கேரக்டர்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். இதன் பிறகு 1995-ல் அஜித்துடன் இவர் நடித்த காதல்கோட்டை திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் தேவயானி.

    இதையும் படிங்க.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ்.. காரணமான அக்கா சிந்து இவர் தான்!

    காதல் கோட்டை கமலி கேரக்டரில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை பெற்றார். 1997-ல் நடித்த சூரியவம்சம் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் தேவயானி. தன்னை வைத்து நீ வருவாய் என திரைப்படத்தி இயக்கிய டைரக்டர் ராஜகுமாரன் மீது காதல் கொண்ட தேவயானி, அவரை கடந்த 2001-ல் திருமணம் செய்து கொண்டார்.

    இதையும் படிங்க.. வானத்தை போல சின்ராசுவாக நடிக்க போவது இவர் தான்! வெளியானது முக்கிய அப்டேட்!

    மும்பையை பூர்வீகமாக கொண்ட தேவயானி இதன் மூலம் தமிழ்நாட்டு மருமகள் ஆனார். வெள்ளித்திரையில் வாய்ப்பு மங்கியதை தொடர்ந்து சன் டிவி-யின் மெகாஹிட் சீரியலான கோலங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்து டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)



    தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் லக்ஷ்மியாக லீட் ரோலில் நடித்து வருகிறார். சின்னத்திரைக்கு வந்த பிறகு எப்போதும் புடவையிலேயே இருக்கும் தேவயானி தற்போது பேண்ட்-ஷர்ட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு மார்டன் டிரெஸ்ஸில் இருக்கும் தேவயானியை பார்த்த அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் மிகவும் அழகாக காட்சியளிப்பதாக கூறி பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published: