உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர் கையேடு வெளியீடு

மாநில தேர்தல் ஆணையம்

ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

 • Share this:
  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

  அத்துடன், தேர்தல் நடைபெற இருக்கும் மாவட்டங்களில், தேர்தலுக்கு தயார் நிலையில் அலுவலர்கள் இருக்கின்றனரா எனவும், மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேட்டை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  அந்த கையேட்டில், ஒருவர், எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினர் அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறாரோ, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு போட்டியிடுவோர் பெயர், தொடர்புடைய ஒன்றிய வாக்காளர்பட்டியலிலும், மாவட்ட ஊராட்சிவார்டுக்கு போட்டியிடுவோர் பெயர், தொடர்புடைய மாவட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளன்று அவர் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ. 200, ஊராட்சித் தலைவர் மற்றும்ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தலா ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மேற்கூறிய தொகையில் 50 சதவீதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட இருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  Must Read : வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களில் 3 ஆண்டுகளில் 200 தமிழர்கள் உயிரிழப்பு

  அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: