10 மற்றும் 12-ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் வெளியீடு

கோப்புப் படம்

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 35 சதவிகித பாடப்பகுதிகளும் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

 • Share this:
  கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக கற்றல் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக 14 பேர் கொண்ட குழுவை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது. இதனையடுத்து ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவிகித பாடப் பகுதிகளும் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 35 சதவிகித பாடப்பகுதிகளும் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

  இந்த நிலையில் தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒவ்வொரு பாடத்திலும் குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் எவை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  நாளை மறுநாள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்க படும் நிலையில் தற்போது குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் எவை என்பது வெளியிடப்பட்டுள்ளது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கின்ற வகையில் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத் தேர்வில் கேள்விகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
  Published by:Vijay R
  First published: