சென்னை மின்சார ரயிலில் பொதுமக்கள் நாளை முதல் பயணம் செய்ய அனுமதி

சென்னை மின்சார ரயிலில் பொதுமக்கள் நாளை முதல் பயணம் செய்ய அனுமதி

மாதிரி படம்.

 • Share this:
  நான் பீக் ஹவர்ஸ் எனப்படும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில் மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தகவல் அறிவித்துள்ளது.

  கரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை படிப்படியான தலைவர்களுடன் தற்போது இயங்கி வருகிறது:

  அத்தியாவசிய பணி, அரசு பணிக்கு செல்பவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்திருந்தது:

  இந்த நிலையில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: