Home /News /tamil-nadu /

மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த குரங்கு இறுதிச் சடங்கு செய்த பொதுமக்கள்.. பாசப் போராட்டம் நடத்திய குரங்குகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை மீட்டு அதற்கு இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை  பஜார் சாலையில் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின் கம்பியில் சிக்கிய குரங்கை மீட்டு கீழே இறக்கினர்.

    மேலும் உயிரிழந்த குரங்குக்கு அப்பகுதி மக்கள் கற்பூரம் ஏற்றி  மாலை அணிவித்தும் மஞ்சள் கும்குமம்  உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து மனிதர்களுக்கு செய்வதுபோல் இறுதி சடங்கு செய்து குரங்கை வழிபட்டனர்.

    தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட குரங்கை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை மீட்டு அதற்கு இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் குரங்குக்கு இறுதி சடங்கு செய்த நேரத்தில் சக குரங்குகள் அங்கும் இங்கும் சுற்றிசுற்றி வந்து பாசப்போரட்டம் நடத்தியது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    செய்தியாளர்- கோபி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Monkey, Vellore

    அடுத்த செய்தி