• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை மேலும் 21 ரயில்கள் ரத்து..

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை மேலும் 21 ரயில்கள் ரத்து..

கோப்பு படம்

கோப்பு படம்

நிவர் புயலால் தமிழகத்தில் வியாழக்கிழமையும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பேருந்துகளும் விமான சேவைகளும் தடைபட்டுள்ளன.

  • Share this:
    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    அதன்படி வியாழக்கிழமை, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்குச் செல்லும் 6 ரயில்களின் சேவை இரு மார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களின் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

    காரைக்குடி- சென்னை , மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவைகளும் வியாழன் அன்று இரு மார்க்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் ரயில், இருமார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது . முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

    Also read: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை மேலும் 21 ரயில்கள் ரத்து

    இதனிடையே சென்னையில் மெட்ரோ ரயில்கள் சேவை வழக்கம்போல் செயல்படுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,சிறப்பு புறநகர் ரயில் சேவை தடைபட்டுள்ளது.



    இந்நிலையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் மற்றும் சென்னைக்கு வரும் 24 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் 3 விமானங்களும், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

    அதேபோன்று திருச்சி, சேலம் செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சென்னை கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, எண்ணூர் சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: