ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா பரவல் அடிப்படையில் மாவட்டங்களை மூன்று வகைகளாக தமிழக அரசு பிரித்துள்ளது. இதில் மூன்றாவது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்துள்ளது. பொது போக்குவரத்தில் 4 மாவட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா 2வது அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கடந்த மே 10ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதால் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவுடையவுள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், மாவட்டங்களை மூன்று பகுதிகளாக பிரித்து தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு புதிதாக எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4 மாவட்டங்களில் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள்  மூன்றாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் பொது போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி,   இந்த மாவட்டங்களில் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், “ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.• சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்” என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இ.பதிவு தேவையில்லை

மேலும், வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai metro, Public Transport