ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

மாண்டஸ் புயல்: திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு அறையில்  முதலமைச்சர் ஆய்வு

பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு

Mandous Cyclone: மாண்டஸ் புயல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சேப்பாக்கத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு அறையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசியதாவது, “மாண்டஸ் புயல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு வருகிறது. எந்த புயல், மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க : மிரட்டும் மாண்டஸ்.. புயல் எங்க இருக்குன்னு லைவ்-ல பார்க்கணுமா?

அந்த வகையில், அனைத்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு முகாம்களிலும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும், இதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.

கேள்வி: மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேசினீர்களே, நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிவித்தார்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின் : சில முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், சில முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

கேள்வி: பொதுமக்களுக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின்: பொதுமக்கள் அரசு மூலமாக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்தால், சூழ்நிலையை வெற்றிகரமாக கையாளலாம்.

முன்னதாக மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங்கில் பேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

First published:

Tags: CM MK Stalin, Cyclone Mandous