• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் தொடர் தர்ணா போராட்டம்...!

CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் தொடர் தர்ணா போராட்டம்...!

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், சட்டப் பேரவை முன்பு, 24 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில், பேசிய மு.க.ஸ்டாலின், மக்களுக்கு குடியுரிமை வழங்க தான் அரசு சட்டம் இயற்றும், ஆனால் குடியுரிமையை பறிப்பதற்கே சட்டம் இயற்றுவது வெட்கக் கேடானது என விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    சிஏஏ-வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுவதற்கு அதிமுக அரசு தான் காரணம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.



    குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்,

    சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், சட்டப் பேரவை முன்பு, மார்ச் மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில், 24 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: