ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: ஜனவரி 22-ல் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: ஜனவரி 22-ல் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காட்டுப்பள்ளி அதான துறைமுகம் விரிவாக்கத்திட்டம் தொடர்பாக ஜனவரி 22-ம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை 53ஆயிரம் கோடி செலவில் 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 22ஆம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் காமராஜர் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ளதுதான் காட்டுப்பள்ளி துறைமுகம். அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த துறைமுகம் தற்போது ஆண்டிற்கு 24.65 மில்லியன் சரக்குகளை கையாளும் திறம் கொண்டது.

இத்துறைமுகத்தை துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவிடம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வல்லுனர் மதிப்பீடுக்குழு விரிவாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கும் பகுதியின் தற்போதைய நிலப்பயன்பாடு, கடலோர ஒழுங்காற்று மண்டல திட்டம் 2018ந் படி நிலத்தின் தன்மை என்னவாக உள்ளது, விரிவாக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள கொசஸ்தலையாற்றின் பரப்பு எவ்வளவு?, விரிவாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கிற நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்கிற விபரம் மற்றும் விரிவாக்கம் மேற்கோள்ளப்படவிருக்கிற இடத்தின் அனைத்துப் திசைகளிலும் 10கிலோமீட்டர் தூரத்திற்கு வசிக்கும் மக்கள் தொகை, எவ்வளவு இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய போன்ற விபரங்களை அறிய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது.

இந்தக் குழுவானது கடந்த ஜூன் மாதம் எண்ணூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்னர் சில நிபந்தனைகளோடு இந்திட்டத்திற்கு அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்திருந்ததன் அடிப்படையில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.

அதனடிப்படையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளை அதானி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்படி மொத்தமாக 6,110 ஏக்கரில் இத்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

அதில் 336 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்படவுள்ளது.2,290 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது.

1,514 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது.மீதமுள்ள 1,966 ஏக்கருக்கு கடற்பகுதியானது மணல் கொண்டு நிரப்பி நிலப்பகுதியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாபெரும் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமானது ஜனவரி 22ஆம் தேதி காலை 11 மணிக்கு மீஞ்சூர் ஜெயின் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் எதிர்ப்பு

எண்ணூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஏற்கெனவே சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர் . இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் எண்ணூர் பகுதியில் மிகவும் மோசமான கடல் அரிப்பு ஏற்படும் எனவும் அருகில் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் பழவேற்காடு ஏரி அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஏற்கனவே எண்ணூர் பகுதி அதிக அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த துறைமுகம் விரிவாக்கப்பட்டால் கூடுதலாக காற்று மாசுபடும் அபாயம் இருப்பதாகவும் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் " சென்னை வாழ்வதற்கும் அதன் எதிர்காலத்துக்கும் எண்ணூர் பழவேற்காடு சதுப்புநிலங்கள் மற்றும் காட்டுப்பள்ளி தீவு முக்கியமானவை ஆகும். இவை மழைநீரை சேகரித்து, வெள்ளத்தை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுத்து நம்மை இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்துக்குள்ளாக்கி டெல்லி போராட்டத்தில் ஒரு முக்கிய இலக்காய் இருக்கும் அதானி குழுமம் தற்போது தமிழகத்தை நோக்கி பேராபத்தை விளைவிக்க இந்த சதுப்புநிலங்களை அழித்து மாபெரும் துறைமுகத் திட்டத்திற்கு முன்மொழிந்திருக்கிறது. துறைமுகத்தினால் தூண்டப்பட்ட கடலரிப்பு பல கிராமங்களை மூழ்கடித்து மேலும் வங்க கடலையும் பழவேற்காடு காயலையும் ஒன்றிணைத்துவிடும் என்பதால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: Environment