• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறுவனை முட்டித்தூக்கிய பசுமாடு.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

சிறுவனை முட்டித்தூக்கிய பசுமாடு.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

சிறுவனை தாக்கும் பசுமாடு

சிறுவனை தாக்கும் பசுமாடு

சென்னை அம்பத்தூரில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவனை பசுமாடு முட்டித்தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    அம்பத்தூரில் இரவில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் குழந்தைகள் மற்றும் முதியோர்களை தாக்கும் சம்பவம் நடந்து வருகிறது. 

    சென்னை மாநகராட்சி மண்டலம் 7-க்கு உட்பட்ட அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் ராஜராஜன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் . இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் வெளியே செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். தினேஷ் மகன் சரத் (4) சிறுவன் தனது உறவுக்கார பெண்ணுடன் வீட்டிற்கு வெளியே  வந்துள்ளான். அப்போது அங்கு தெருவில் கூட்டமாக கன்றுடன் நின்றிருந்த பசுமாடு ஒன்று திடீரென சிறுவன் எதிர்பாராத நேரம் பார்த்து ஆவேசமாக முட்டியது.

    சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு  தந்தை மற்றும் உறவினர்கள் பசு மாட்டை விரட்டினர். அப்பொழுது மீண்டும் அந்தப் பசு மாடு குழந்தையின் பாட்டி மற்றும் குழந்தையை மீண்டும் முட்டத் தொடங்கியது. பயம் கலந்த வலியால் பதைபதைத்துப் போன சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    மேலும் அந்தப்பகுதியில் ஏராளமான மாடுகள் அவ்வப்போது வீதியில் சுற்றி வருவதாகவும் இதுகுறித்து அம்பத்தூர் மாநகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தெருக்களில் மாடுகள் நாய்கள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: