Home /News /tamil-nadu /

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், , இல்லம் தேடி கல்வியின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்பட்டது.4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் இதற்காக பதிவு செய்துள்ளார்கள். இல்லம் தேடி கல்வி மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்கவும் ...
    நடப்பாண்டில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வியின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்பட்டது.4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் இதற்காக பதிவு செய்துள்ளார்கள். இல்லம் தேடி கல்வி மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம், ஒட்டுமொத்தமாக 80 நம் ஆயிரம் மையங்கள் கைவசம் உள்ளது.

    இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நமக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும்,  தமிழகத்தை பொறுத்த வரை தற்போது 15 முதல் 18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது  என குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக பணியாற்றுகிறார்: தாமோ அன்பரசன்


    மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இதுவரை தமிழகத்தில் 1600 பள்ளிகட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Public exams, School students

    அடுத்த செய்தி