• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புகளுக்கு செல்வதில் தடையில்லை - பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புகளுக்கு செல்வதில் தடையில்லை - பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

அமைச்சர் செங்கோட்டையன்  (கோப்பு படம்)

அமைச்சர் செங்கோட்டையன் (கோப்பு படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    5-ம் வகுப்பில் 3 பாடங்களுக்கும் 8-ம் வகுப்பில் அனைத்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல், வகுப்பு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறமையை வளர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆங்கில கையேடு வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாகக் கூறினார்.

    5 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை தயாரிக்கும்படி உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகவே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகக் கூறிய செங்கோட்டையன், இதனால் மாணவர்களும், பெற்றோரும் அச்சப்படத் தேவையில்லை என விளக்கமளித்தார்.

    5 மற்றும் 8ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்குச் செல்வதில் தடையில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால், மாணவர்களிடையே சிறுவயதிலேயே ஏற்றத்தாழ்வு உருவாகி விடும் என ஆதங்கப்படுகின்றனர் கல்வியாளர்கள்.

    இதற்கிடையே, அரசு பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: