• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தென்காசியில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கேரளவில் இருந்து தமிழக எல்லையான கோட்டை வாசல்வரை கேரள பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன.

  • Share this:
    தமிழகத்தில் இருந்து 4 மாதங்களுக்கு பின் கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், கேரளவிற்குச் செல்ல தென்காசியில் இருந்து இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில், கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    அத்துடன், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

    இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக திருவனந்தபுரம், கொல்லம், கொட்டாரகரை, எர்ணாகுளம், புனலூர், சபரிமலை, உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பலபகுதிகளுக்கு தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு மாநில பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள், கூலி தொழிலாளிகள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழக அரசு நேற்று முதல் மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து சேவை துவங்கிய நிலையில், தென்காசியில் இருந்து கேரளவிற்கு பேருந்து சேவை தொடங்கவில்லை. மேலும், கேரளவில் இருந்து தமிழக எல்லையான கோட்டை வாசல்வரை கேரள பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன.

    Must Read : ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

    இதனால், தமிழக அரசு கேரளாவிற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வியாபாரிகள், மற்றும் இருமாநில மக்கள் எதிர்பார்த்து காத்து நிர்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செய்தியாளர் - ச.செந்தில், தென்காசி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: