மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை செருப்பால் அடித்த பொதுமக்கள் (வீடியோ)

Youtube Video

சென்னை வடபழனியில் மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 • Share this:
  சென்னை எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்ப்பவர் ராஜு. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து விட்டு போதையில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வடபழனியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற காவலர் ராஜு, அவரிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரது கன்னத்தில் அடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பெண்ணை காவலரிடம் இருந்து மீட்டனர்.

  பின்னர் காவலரை சரமாரியாக அடித்து தாக்கினர்.  பெண்கள் செருப்புகளால் காவலரைத் தாக்கினர். அப்போது தாக்குதல் காட்சியைப் பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காவலரை வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  முதற்கட்ட விசாரணையில் கேகே நகர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக ராஜு பணிபுரிந்து வருகிறார். அங்கும் பெண் காவலர்களிடமும் பொதுமக்களிடமும் சம்பந்தமில்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்ததால் தண்டனையாக, எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க...தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  இந்த வழக்கில்,  ராஜு மீது நடவடிக்கை எடுக்க வடபழனி காவல்நிலைய போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டது.

   

  தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல், பெண் வன்கொடுமைத் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர் ராஜு கைது செய்யப்பட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: