• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் 10 நாட்களும் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது: மாவட்ட ஆட்சியர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் 10 நாட்களும் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது: மாவட்ட ஆட்சியர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் 10 நாட்களும் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது: மாவட்ட ஆட்சியர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் 10 நாட்களும் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது: மாவட்ட ஆட்சியர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் பத்து நாட்களும் பொதுமக்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தங்கும் விடுதிகளை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
உலகப் பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

அதனை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. வேளாங்கண்ணி பேராலயத்தில் சாரங்கள் அமைக்கப் பட்டு தொழிலாளர்கள் வெள்ளை வர்ணம் பூசும் பணி செய்து வருகின்றனர். மேலும் திருவிழாவில் கொடியேற்ற நிகழ்வு மற்றும் தேர் பவனியில் பங்கேற்க உள்ள வாகனங்கள் புதுப்பிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also read: அத்திவரதர் வைபோகத்தின்போது நடந்த முறைகேடுகள், நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு?

திருவிழா வரும்  29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் வழக்கமாக இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் மூன்றாம் அலை காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் 10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொது மக்களுக்கும் அனுமதியில்லை என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

மேலும்  பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொளி வாயிலாக ஒளிபரப்பலாம் எனவும், திருவிழா நடைபெறும் வரும் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை பத்து நாட்களும் வேளாங்கண்ணி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி  மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: