• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ - ஜெயலலிதா நினைவிடம் மக்கள் பார்வைக்கு இன்று முதல் அனுமதி

‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ - ஜெயலலிதா நினைவிடம் மக்கள் பார்வைக்கு இன்று முதல் அனுமதி

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு இன்று முதல் அனுமதி.

சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத் திறப்பு விழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை திட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவினர் இரண்டரை ஆண்டுகளில் கட்டுமான  பணிகளை முடித்து கொடுத்துள்ளனர்.

நினைவிடத்தில், விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 'மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி' ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில், புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது; ஏராளமான மலர் செடிகளும் நடப்பட்டுள்ளன.இரவில் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை  அறிவித்தது.

ஜெயலலிதா நினைவிடம்


இதை தொடர்நது கடந்த மார்ச் 19 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் வரை அனுமதிக்கப்பட்டது,இந்நிலையில் இன்று மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது, இன்று காலை முதல் பொதுமக்கள் பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட நாட்களாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு பார்ப்பதற்காக ஆவலோடு பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பலமுறை வந்து பார்த்தபோது பராமரிப்பு பணி நடப்பதால் மூடப்பட்டிருந்தது,இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளித்ததாக தகவல் அறிந்து ஜெயலலிதா அவர்களின் சமாதியை பார்க்க வந்துள்ளோம் இது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது, சுற்றுப்புறம் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என பொதுமக்கள் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: