Home /News /tamil-nadu /

பப்ஜி மதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

பப்ஜி மதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த பப்ஜி மதன், முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூ டியூபில் வெளியிட்டு பணம் சம்பாதித்தது, பெண்கள், சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைப்பட்ட பப்ஜி மதன் கடுமையான முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த மதன் (29), இரு யூ-டியூப் சேனல் களை நடத்தி வந்தார். அதன் மூலமாக அவர் தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

    இந்நிலையில் மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் விடியோ,ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகின. இது குறித்து வடபழனியைச் சேர்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதன் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதன் பின்னர் அவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த பப்ஜி மதன், முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் மதன், ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் ஞாயிற்றுக் கிழமை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தாமலே சான்றிதழ்; "கணக்கு" காட்டுகிறதா சுகாதாரத்துறை?

    Published by:Murugesh M
    First published:

    Tags: PUBG, Pubg game

    அடுத்த செய்தி