முகப்பு /செய்தி /தமிழ்நாடு / PUBG Madan :'நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா..’ எல்லாமே காதுகொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் - யார் இந்த மதன் ?

PUBG Madan :'நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா..’ எல்லாமே காதுகொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் - யார் இந்த மதன் ?

போலீஸாரால் கைது செய்யப்பட்ட மதன்

போலீஸாரால் கைது செய்யப்பட்ட மதன்

வீடியோக்களில் கேம்-க்கான ட்ரிக்ஸ்-யை விட ஆபாச வார்த்தைகள் அதிகமானது. பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பப்ஜி ஆன்லைன் விளையாட்டின் போது, ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்ட புகாரின் பேரில் மதன் என்கிற மதன்குமாரை தமிழக காவல்துறையினர் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

பப்ஜி ( Player unkowns battle grounds) ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு கேம். விபிஎன் முறையில் இந்த விளையாட்டை இந்தியாவில் சட்டவிரோதமாக சிலர் விளையாடி வருகின்றனர். இந்த கேம்-க்கை இரவு பகல் பாராமல் விளையாடும் ஒரு கூட்டம் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பப்ஜி விளையாட்டே கதி என மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு இந்த விளையாட்டின் ட்ரிக்சை விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல்.

இந்த கேமில் சூப்பர் சாட்டிங் மூலம் லைவ்வாக பேசிய படியே விளையாட முடியும். இந்த கேம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பு பெற்றதுக்கு இதுவும் ஒரு காரணம். இந்த சூப்பர் சாட்டிங்கை மதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இந்த விளையாட்டின் மூலம் பிசினஸ் செய்யத் தொடங்கினார் மதன். ஆனால் அதற்கு அவர் தேர்ந்தேடுத்த முறைதான் இப்போது அவருக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது. இந்த மதனின் யூடியூப் சேனலில் இருக்கும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள் தான் அதிகம் இருக்கும். இது யூடியூப்பில் இவரது வீடியோக்கள் ஹிட் அடிக்க ஒரு காரணமகாக அமைந்தது. ஏராளமான ஃபாலோயர்களை இவருக்கு பெற்றுத் தந்தது.

Also Read: PUBG Madan : ‘என்னை விட்டுவிடுங்கள்’... போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி மதன்

இதன்காரணமாக நாளுக்கு நாள் இவரது வீடியோக்களில் கேம்-க்கான ட்ரிக்ஸ்-யை விட ஆபாச வார்த்தைகள் அதிகமானது. பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார். விளையாட்டில் வெற்றிப்பெறும் போது ‘நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா.. மதன் டா.. என ஆரம்பிக்கும் அவரது பேச்சை காதுக்கொடுத்து கேட்க முடியாது. வெற்றியின் கொண்டாட்டத்தில் மதன் பேசும் இந்த பேச்சுகளை ரசிக்கும் சிலர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். சப்ஸ்க்ரைபர்கள் அதிகமானது லட்சங்களில் வருமானம் வரத் தொடங்கியது. சிறுவர், சிறுமிகள் இந்த மதனை பின்தொடர்வதுதான் வேதனையே. இதில் பெண்கள் குறித்து மோசமாக பேசும்போது அந்த கேமில் இருக்கும்  பெண் சப்ஸ்க்ரைபர் பதிலளிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாளுக்குநாள் மதனின் வீடியோக்களில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சுகள் அதிகமானது. இந்த கேமில் இருக்கு பெண்களிடம் இன்ஸ்டாவில் ஆன்லைன் சேட்டிங் செய்ய வரக் கூறுவதும்அதற்கு சிலர் சரி என சம்மதம் கூறும் வீடியோக்களும் உள்ளது. பெண்களிடம் இதுபோன்று பேசுவதும் மதன் வருமானம் ஈட்ட எடுத்துக்கொண்ட ட்ரிக்ஸ்கள். இப்படி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசும் மதன் யூடியூப் சேனல் மீது க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டன.

இதனையடுத்து காவல்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. யூடியூபர் மதனின் சொந்த ஊர் சேலம். மதன்குமார் என்ற தனது பெயரை ஷார்டாக மதன் என்றும் இவருக்கு திருமணமாகி கிருத்திகா என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் தேடுவருவதை உணர்ந்த மதன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். போன் சிக்னலை வைத்து சேலத்தில் இருந்த கிருத்திகாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிருத்திகா, மதன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டது தெரியவந்தது. மதனின் யூடியூப் சேனலின் அட்மினாக கிருத்திகாதான் இருந்து வந்துள்ளார். யூடியூப்பில் ஒரு கேமர் போன்று பேசும் பெண் கிருத்திகா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

யூடியூப்பில் தங்களுக்கு வந்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழக்கையை நடத்தி வந்துள்ளனர். பங்களாக்கள் இரண்டு சொகுசு கார்கள் என ஏகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார் மதன். இவரை புகழ்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவிடுபவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு அதன் மூலமும் வருவாய் ஈட்டியுள்ளார். மதன் மூலமும் சில யூடியூப்பர்கள் லாபமடைந்திருப்பதாக தெரிகிறது. சிலருக்கு ஆயிரங்களை அள்ளிக்கொடுத்துள்ளார் மதன்.

தருமபுாி அருகே உள்ள குண்டல்பட்டியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்த மதனை தனிப்படை போலீஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பப்ஜி மட்டுமின்றி தடைசெய்யப்பட்ட சில கொரிய விளையாட்டுகளை பதிவிற்றக்கம் செய்ததும் விசாரணயில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்ட்ட மதன் காவல்துறை காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார். குழந்தைகள் பெண்களை சீரழித்து விட்டேன். இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன், என்னை விட்டு விடும்படி மதன் கெஞ்சியுள்ளார். இரண்டு சொகுசு கார், ஆப்பிள் டேப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மதனின் பெண் தோழிகள் குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Online Game PUBG, PUBG, Pubg game, Youtube, YouTuber Madan