Home /News /tamil-nadu /

செருப்பு வீச்சு சம்பவம்: 'திமுக அனுப்பிய அம்பு, எய்தவரிடமே திரும்பி வரும் படலம்' - நடிகை கஸ்தூரி ட்வீட்

செருப்பு வீச்சு சம்பவம்: 'திமுக அனுப்பிய அம்பு, எய்தவரிடமே திரும்பி வரும் படலம்' - நடிகை கஸ்தூரி ட்வீட்

சரவணன் , நடிகை கஸ்தூரி

சரவணன் , நடிகை கஸ்தூரி

PTRs car attacked with slipper : , பாஜக மத அரசியலில் ஈடுபடுவது உடன் பாடில்லை. நிதி அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாதது என்று சரவணன் கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திமுக அனுப்பிய அம்பு, தன் வேலையை சரியாக செய்துவிட்டு எய்தவரிடமே திரும்பி வரும் படலம்....என டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பழனிவேல் சந்திப்பு குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

    ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டுள்ளார். அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எறிந்துள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறையினர், பாஜகவைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பழனிவேலை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மத அரசியலில் ஈடுபடுவது உடன் பாடில்லை. நிதி அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாதது. அந்த சம்பவம் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை. நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன் என கூறினார்.

     



     

    டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பழனிவேலை சந்தித்தது குறித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி, திமுக அனுப்பிய அம்பு, தன் வேலையை சரியாக செய்துவிட்டு எய்தவரிடமே திரும்பி வரும் படலம்....என பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த சரவணனைபாஜகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

     

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actor Kasthuri, BJP, Chennai, Madurai

    அடுத்த செய்தி