முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர்செல்வம் பேசும்போதே அவையில் இருந்து வெளியேறிய பழனிவேல் தியாகராஜன்.. அவமரியாதை என அதிமுக குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போதே அவையில் இருந்து வெளியேறிய பழனிவேல் தியாகராஜன்.. அவமரியாதை என அதிமுக குற்றச்சாட்டு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்போது நிதியமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு என்றும், ஆனால் அதிமுகவை அவமதிக்கும் வகையில் அவையிலிருந்து வெளியேறியது கடும் கண்டத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பேசிகொண்டிருந்தபோது அவமரியாதை செய்யும்விதமாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறிவிட்டதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. சட்டபேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு உரிய மரியாதை கொடுக்காததால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பட்ஜெட் குறித்த பல்வேறு புள்ளி விவரங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தும், பட்ஜெட்டை விமர்சனம் செய்தும் பேசினார். அதற்கு அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஓ. பன்னீர்செல்வம் பேசி முடிக்கும் முன்பே,  அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.

அமைச்சரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவையில் இப்பிரச்னையை எழுப்ப முயன்றார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்போது நிதியமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு என்றும், ஆனால் அதிமுகவை அவமதிக்கும் வகையில் அவையிலிருந்து வெளியேறியது கடும் கண்டத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கோபாலபுரம் குடும்பத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை... அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பிஜிஆர் நிறுவனம் விளக்கம்

இந்நிலையில் உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுமென்றே வெளியே செல்லவில்லை என்றும், பணி நிமித்தமாகவே அவர் வெளியே சென்றதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, Minister Palanivel Thiagarajan, O Panneerselvam, TN Assembly