Home /News /tamil-nadu /

திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை - ஜே.பி.நட்டா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்

திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை - ஜே.பி.நட்டா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்

ஜேபி நட்டா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஜேபி நட்டா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஒரு வேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த ‘Entire Political Science’ படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார்” என கேலி செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திமுகவில் படித்த தலைவர்கள் இல்லை அதனால் தான் நீட் தேர்வையும் தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

    2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பாஜக தலைவர் ஜேபி நட்டா, காரைக்குடியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசினார். அதில், “திமுக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கேள்விபட்டேன். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர்கள் நீட்டை எதிர்த்தனர். திமுகவில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் அவர்கள் நீட்டை எதிர்க்கின்றனர்” என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “2 நாடுகளில் 3 பல்கலைகழகங்களில் 4 வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை'' என ஜேபி நட்டா கூறியுள்ளார்.

    ஒரு வேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த ‘Entire Political Science’ படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார்” என கேலி செய்துள்ளார்.



    இந்நிலையில் திமுக தலைவர்களின் கல்வி தகுதியை அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    முதலமைச்சர் ஸ்டாலின் - அரசறிவியல், இளங்கலை பட்டம்
    அமைச்சர் மா. சுப்பிரமணியன் - பிஏ, எல்எல்பி
    அமைச்சர் பொன்முடி வரலாற்றில் எம்ஏ
    அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - 4 பட்டங்கள், பிஎச்டி
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, DMK, JP Nadda

    அடுத்த செய்தி