முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. பத்திரமா இருக்கு வந்து வாங்கிட்டு போகலாம்.." அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

"செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. பத்திரமா இருக்கு வந்து வாங்கிட்டு போகலாம்.." அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

கார் மீது காலணி வீச்சு

கார் மீது காலணி வீச்சு

பழைய விமான முனையத்தின்  சிண்ட்ரெல்லா’ தனது செருப்பு  மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாகராஜன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பழனிவேல் தியாகராஜன், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

மேலும் படிக்க: சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட  சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், நள்ளிரவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார்.  பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், தனது கார் மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவேன், ஆனால் இப்போதைக்கு....  பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன்  அனுமதிக்கப்பட்ட காணாமல் போன ‘ பழைய விமான முனையத்தின்  சிண்ட்ரெல்லா’ தனது செருப்பு  மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Madurai, Minister Palanivel Thiagarajan, Tweet