Home /News /tamil-nadu /

நலத்திட்டங்கள் இலவசமா.. நீங்கள் யார் அதை சொல்ல: ஆவேசப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நலத்திட்டங்கள் இலவசமா.. நீங்கள் யார் அதை சொல்ல: ஆவேசப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை விட தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறைவானது. இப்படி இருக்கும்போது  நாங்கள் எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்பதை எப்படி யாரோ சொல்ல முடியும் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தொடர்பான விவாதம் ஒன்றில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில்போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

  இந்நிலையில்,  அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தொடர்பான வாக்குறுதிகளை தலைப்பாக கொண்டு ஆங்கில ஊடகம் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.  அப்போது, இலவசங்கள் என்றால் என்ன? அவற்றை முறைபடுத்த வேண்டுமா .. அப்படியென்றால் யார்  அதை செய்வது என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

  இதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த விவாதம் இதற்கு முன்பு 15வது  நிதிக் குழு தனது நெறிமுறைகளை வெளியிட்டப் போதே நடைபெற்றது. அப்போது ஒரு திட்டத்தை நல்ல  இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.  நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை கண்காணிப்பவராக உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் செயல்படுகிறது. அரசியலைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல எந்த நீதிமன்றமும்  எப்படி மக்களின் பணம் செலவிடப்படுகிறது  என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க: சர்வாதிகார அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளாசல்

  மேலும்,  ‘இலவசங்கள் தீய காரியம் என்றால் அதிமுக அரசின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க ஏன் பிரதமர் டெல்லியில் இருந்து சென்னைக்கு பறந்துவந்தார். பல்வேறு வழிகளிலும் மோசமான திட்டம் அது’  என விமர்சித்தார்.  இதேபோல், தமிழ்நாடு இலவசங்களை வழங்குகிற மாநிலம் என்று நீங்கள் கூறினால், இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருவாய், மனிதவழ மேம்பாடு, சமூக மேம்பாடு,உயர் கல்வியில் சேருபவர்கள் விகிதம் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

  கடன்பெறும் வரம்பை விட எங்களின் நிதி பற்றாக்குறை குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை விட தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறைவானது. இப்படி இருக்கும்போது  நாங்கள் எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்பதை எப்படி யாரோ சொல்ல முடியும். நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்  என பதிலளித்தார்.  அப்போது இலவசம் வழங்கும் கலாச்சாரத்துக்கு எதிராக பிரதமரே அழுத்தம் தருகிறாரே என்ற நேறியாளர் கேள்விக்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‘உங்களுக்கு ஏதேனும் சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரத்தில் இரண்டு முனைவர் பட்டங்கள் அல்லது நோபல் பரிசு என நீங்கள் எங்களைவிட சிறந்தவர் என்பதை நிரூபிக்க ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும். தனிநபர் வருவாயை அதிகரித்துள்ளீர்கள், வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள் என்றால் நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிக்கலாம்.

  இதையும் படிங்க: புதுச்சேரியில் 3 நாள் உணவு மற்றும் ஒயின் திருவிழா... விதவிதமான ஒயின் வகைகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

  அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும். இதுதான் சரியான வரையறை என்றும், கடவுளின்  வார்த்தை என்றும் ஏன் நம்ப வேண்டும். நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், எந்த தனி மனிதனையும் கடவுள் என்று நம்ப தயாராக இல்லை’ என பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இந்த வீடியோவை தமிழ் மொழிபெயர்ப்பு உடன் பகிர்ந்துள்ளார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Minister Palanivel Thiagarajan, Social media

  அடுத்த செய்தி