முதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது!

முதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது!
கைதான ஆண்டிச்சாமி
  • Share this:
ஆதரவற்ற முதியோர்கள் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல், கடந்த 3ம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் நள்ளிரவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து நடந்த ஆதரவற்றவர்களின் கொலை சம்பவங்கள் சேலத்தில் மட்டுமின்றி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கொலையாளியைப் பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் மூன்று தனிப்படைகளை அமைத்தார்.


தனிப்படை போலீசார் கொலைகள் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தனர். அதில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் பெரிய கல் ஒன்றை தூக்கி வந்து முதியவர்களை தாக்கி கொன்று விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் காசுகளை திருடிச் செல்வதும் தெரியவந்தது.

போலீசாரின் தேடல் வேட்டையில், சிசிடிவி காட்சிகளில் இருந்த இளைஞரைப் போன்ற தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினார். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறி மாறி தகவல்களைத் தெரிவித்து வந்ததால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில்,சிசிடிவி காட்சிகளில் இருந்த இளைஞரின் அடையாளங்களையும், போலீசாரிடம் சிக்கிய இளைஞரின் புகைப்படங்களையும் பெங்களூரில் உள்ள தடயவியல் பிரிவில் ஒப்பிட்டு பார்க்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதில், இரண்டு நபரும் ஒருவரே என்பது உறுதியானதை அடுத்து, அவரே இரண்டு கொலைகளையும் செய்த இளைஞர் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். தொடர் விசாரணையில் அந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்த 21 வயது ஆண்டிச்சாமி என்பது தெரியவந்தது

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர் அந்த இளைஞர் என்பதும் விசாரணை்யில் தெரியவந்தது. போதைக்கு அடிமையான ஆண்டிச்சாமி, ஒரு கட்டத்தில், போதைப் பொருட்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். திருத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அவரது உறவினர்கள், பின்னர் நம்பிக்கையிழந்து அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்

எப்படியோ சேலம் வந்த ஆண்டிச்சாமி, கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்த நிலையில் போதைப் பொருள் வாங்க பணம் தேடியுள்ளார்.

அப்போதுதான் சாலையோரங்களில் துாங்கும் ஆதரவற்ற முதியோர்களைக் கொலை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுஇதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவருக்கு போதையில் இருந்து மீளும் பயிற்சி அளித்து சிகிச்சை அளிக்கும் முடிவில் உள்ளனர்.

 

 
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்