PSBB Sexual Harassment Case : ஆசிரியர் ராஜகோபலனை 14 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு

ஆசிரியர் ராஜகோபலன்

போக்சோ, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  • Share this:
    சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை கே.கேநகரில் உள்ள PSBB பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில், ராஜகோபாலன் எனும் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு, பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Also Read : ஆசிரியர் ராஜகோபலன் அளித்த வாக்குமூலத்தில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

    இதனிடையே, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில், போக்சோ, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி, முகமது ஃபாருக் வீட்டில் இன்று காலை நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அங்கு ராஜகோபாலனை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக ராஜகோபாலனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
    Published by:Vijay R
    First published: