பத்ம சோஷத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் விவகாரம்.. மதுவந்தியின் ஆவேசமான பதில்கள்

மதுவந்தி

பத்ம சோஷத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகர் ஓய்.ஜி.மகேந்திரா மகள் மதுவந்தி இணையத்தில் பதில் அளித்துள்ளார்.

 • Share this:
  ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

  இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபலங்கள் பலர் தங்களது கருத்தை பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் போலீசார் ராஜகோபலனை விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

  இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஓய்.ஜி.மகேந்திரா மகள் மதுவந்தி இணையத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

  அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் பத்ம சோஷத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மிகவும் மோசமான சம்பவம். அசிங்கமான ஒன்றும் கூட. பத்மா சோஷத்ரி பள்ளி மாணவி கூறிய புகார் எனக்கு மற்றும் எனது தந்தை கவனத்திற்கும் வந்தது. என் தந்தை உடனடியாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடிதம் எழுதினார்.

  Also Read :  ஆசிரியர் ராஜகோபலன் அளித்த வாக்குமூலத்தில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

  இந்த விவகாரத்தில் சிலர் என்னையும், ஜாதி மற்றும் இனம் சார்ந்த அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பள்ளி என்னுடையது தான். ஆம் இந்த பள்ளியின் முன்னாள் மாணவி என்பது மட்டுமே எனக்கு உள்ள தொடர்பு. எனது பாட்டி தனது வியர்வையும், ரத்தத்தையும் சிந்தி இந்த பள்ளியை ஆரம்பித்தார். இந்த பள்ளிக்கு எந்த ஒரு கலங்கத்தையும் ஏற்படுவதை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.  இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எங்களது கருத்தாக உள்ளது. அதுவரை நாங்கள் சும்மா இருக்க போவதில்லை, கேட்க வேண்டிய கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருப்போம் என்றுள்ளார்.

   
  Published by:Vijay R
  First published: