பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் விவகாரம்: ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி

பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் பாலகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 • Share this:
  சென்னை கேகே நகரில் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் துறையை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

  அத்துடன் மாணவிகளின் தோற்றம் பற்றி தவறான கருத்துகளைக் கூறுதல், இரவு நேரங்களில் அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்தல், வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது அவர்களை சங்கடத்திற்கு உள்ளாகும்படி பேசுதல் என ராஜகோபாலன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முன்னாள் மாணவர்கள் தங்களின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவந்தனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியை தொடர்பு கொண்டு கேட்ட போது, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நேற்றிரவுதான் இந்த புகார் தங்களுக்கு தெரியவந்ததாகவும் கூறினர். ஆசிரியர் ராஜகோபால் மீதான புகார் நிரூபணமானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.

  இந்த விவகாரம் தொடர்பாக உடனடியா விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, சென்னை மடிப்பாக்கம் பகுதியிலுள்ள குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபல் வீட்டுக்குச் சென்று அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மடிப்பாக்கத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலிடம் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுவரையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: