பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிய ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

  அதனையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 24 ஆம் தேதி ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர். இவரால் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்தனர்.

  இதையடுத்து மேலும் இரு மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் தற்போது 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் ஆறு மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: