Home /News /tamil-nadu /

புயல் பாதிப்புகளுக்கு விடுவித்த ரூ.74 கோடியை தமிழக அரசு யாருக்கு செலவு செய்தது? - மு.க.ஸ்டாலின் கேள்வி

புயல் பாதிப்புகளுக்கு விடுவித்த ரூ.74 கோடியை தமிழக அரசு யாருக்கு செலவு செய்தது? - மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு ரூ.74 கோடியை யாருக்கு செலவு செய்தது என்று முதல்வருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், மாநிலம் முழுவதும் கணக்கிடமுடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மாநில பேரிடர் நிதியிலிருந்து 74 கோடி ரூபாயை விடுத்த தமிழக அரசு அதை யாருக்கு செலவு செய்தது என மக்களுக்கு இதுவரை தெரியவில்லை என சாடியுள்ளார். பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் தற்போதுவரை அடித்தட்டு மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்காமால், அரசு விழாக்களில் தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே முதலமைச்சர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Cyclone Nivar, Dmk leader mk stalin

    அடுத்த செய்தி